உளவளத் துணை அணுகுமுறைகள்:
உளப் பகுப்பாய்வுக் கொள்கை.
உளப் பகுப்பாய்வுக் கொள்கை.
சிக்மன் ப்ராய்டின் உளத்தாக்கம் பற்றிய இரண்டாவது கொள்கை உளப்பகுப்பாய்வுக் கொள்கையுடன் தொடர்புடையது.
நரம்புப் பிணி உள்ளத்தாக்கம், அகத்தின் பிரதிபலிப்பு, பிள்ளைப் பருவத்தில் தண்டனைக்குப் பயப்படுதல், இட்டின் ( Id) நிறைவேறாத ஆசைகள் ஆகியன நனவிலி நிலையில் ஒடுக்கப்படுகின்றன. என விளக்கம் அளிக்கின்றார்.
ஆனால் இவை தகுந்த சந்தர்ப்பம் வரும் பொழுது மீண்டும் நனவு நிலைக்கு வரலாம். இவனது அடக்கப்பட்ட நிறைவேறாத பாலியல் ஆசைகளும் வன்செயல்ளும் வளர்ந்தோரின் எதிர்ப்பு காரணமாக வெளிப்படுத்த முடியாது இருக்கக் கூடும்.
இச் சம்பவங்கள் நனவிலி உள்ளத்தில் ஒடுக்கப்படுகின்றன.
அநேகமாக பிள்ளையின் பாலியல் நடத்தையுடன் தொடர்புடைய நிகழ்ச்சிகளே இவ்வாறு ஒடுக்கப்படுவதாக பிராய்ட் கூறுகிறார்.
மேலும் இவை அமைக்கப்பட்ட கம்பிச் சுருள் போல நனவிலி உள்ளத்தில் அடக்கப்பட்டிருப்பதாகவும் அடிக்கடி கனவு நிலைக்கு திரும்பி வர முயன்று கொண்டிருப்பதாகவும் கூறுகிறார்.
எனவே தற்போது பிள்ளைக்கு ஏற்பட்டுள்ள பதகளிப்பு, நரம்புப்பிணி,போன்றவை பல காலம் நிறைவேறாத பாலியல் ஆசைகள் அதிக பயத்தை விளைவித்த பழைய அனுபவங்கள் காரணமாக ஏற்பட்டதாக பிராய்ட் விளக்கம் கூறுகிறார்.
பிராயட்டின் கூற்றுப்படி இன்று மனிதனைத் துன்புறுத்தும் நரம்புப் பிணிக்கு பரிகாரம் தேடுவதற்கு அவனின் கடந்த கால அனுபவங்கள்,கனவுகள்,வாய்ப்புக்கள் யாவற்றையும் அறிய வேண்டும் என்கிறார்.
உளப்பகுப்பாய்வு அணுகுமுறை மூலம் கடந்த கால நனவிலி நிலையில் ஒடுக்கப்பட்ட நிகழ்ச்சிகளை வெளிக் கொணர்ந்து அவை அகற்றப்பட வேண்டும் .
பிள்ளைப் பருவத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளை முதிர்ச்சி அடைந்தது மனிதனின் நிலையில் இருந்து அவற்றை தீர்த்துக் கொள்ள துணை நாடிக்கு ஆதரவு வழங்க வேண்டும் .
உளப்பகுப்பு பரிகார முறையில் இதனைத் தீர்க்க ஒரு வாரத்தில் பல நாட்களுக்கு ஆலோசனை பெறும் துணை நாடியுடன் நேரில் உரையாட வேண்டும்.
இவ்வாறு பல மாதங்கள் தொடர வேண்டி இருக்கும். இவ்வாறான சந்திப்புக்கு மிகவும் சுதந்திரமான கலந்துரையாடலுக்கு ஏற்ற இடம் இருத்தல் வேண்டும்.
ஆலோசனை கூறுபவருக்கு நேர அவகாசமும் செய்முறைப் பயிற்சியும் அவதானிக்கும் திறனும் அவசியம் தேவைப்படும்.
உளப்பகுப்பாய்வு முறையில் சுயாதீன இயல்ப முறையை பயன்படுத்தி துணை நாடியின் நினைவுகள் எண்ணங்கள் சுயாதீனமாக தட்டுப்பாடின்றி வழிந்தோட இடமளித்தல்.
ஆலோசனை கூறுபவர் பிள்ளை கூறுவது யாவற்றையும் கேட்டுக் கொண்டு துணை நாடி சுயாதீனமாக நனவிலி உள்ளத்தில் உள்ளவற்றைக் கூற சந்தர்ப்பம் அளித்தல்.
துணை நாடியின் பிரச்சினைக்கு அனுபவம் உள்ள உதவியாளரின் உதவியுடன் தீர்வினை வழங்குதல்.

Comments
Post a Comment