Skip to main content

Posts

Showing posts from December, 2019
உளவளத் துணை அணுகுமுறைகள்:   உளப் பகுப்பாய்வுக் கொள்கை. சிக்மன்  ப்ராய்டின் உளத்தாக்கம் பற்றிய இரண்டாவது கொள்கை உளப்பகுப்பாய்வுக் கொள்கையுடன் தொடர்புடையது. நரம்புப் பிணி உள்ளத்தாக்கம், அகத்தின் பிரதிபலிப்பு, பிள்ளைப் பருவத்தில்  தண்டனைக்குப் பயப்படுதல், இட்டின் ( Id) நிறைவேறாத ஆசைகள் ஆகியன நனவிலி நிலையில் ஒடுக்கப்படுகின்றன. என விளக்கம் அளிக்கின்றார். ஆனால் இவை தகுந்த சந்தர்ப்பம் வரும் பொழுது  மீண்டும்  நனவு நிலைக்கு  வரலாம். இவனது அடக்கப்பட்ட நிறைவேறாத பாலியல்  ஆசைகளும் வன்செயல்ளும் வளர்ந்தோரின் எதிர்ப்பு காரணமாக  வெளிப்படுத்த முடியாது இருக்கக் கூடும். இச் சம்பவங்கள்  நனவிலி  உள்ளத்தில் ஒடுக்கப்படுகின்றன. அநேகமாக  பிள்ளையின் பாலியல் நடத்தையுடன் தொடர்புடைய நிகழ்ச்சிகளே இவ்வாறு ஒடுக்கப்படுவதாக பிராய்ட் கூறுகிறார். மேலும் இவை அமைக்கப்பட்ட கம்பிச் சுருள் போல நனவிலி  உள்ளத்தில் அடக்கப்பட்டிருப்பதாகவும் அடிக்கடி கனவு நிலைக்கு  திரும்பி வர முயன்று  கொண்டிருப்பதாகவும் கூறுகிறார். எனவே தற்போது பிள்ளைக்கு ஏற்ப...
சிற்றூர் பள்ளி  அல்லது  கிராமப் பாடசாலை ගුරුගෙදර சிற்றூர் பள்ளியில் வாசிப்பு ,எழுத்து என்னும்  பாடங்கள் சார்பான அடிப்படைப் போதனை மட்டும்  அளிக்கப்பட்டது. குருவின்  வீடே சிற்றூர்  பள்ளியாக விளங்கினது.சிற்றூரில் வசித்த பிள்ளைகளில் பெரும்பாலானவர்கள் ஆரம்ப நிலைக் கல்வி பயில இத்தகைய  வீட்டு மையச் சிற்றூர்  பள்ளிக்குச் சென்றார்கள்.
உளவளத் துணை அணுகுமுறைகள் : நடத்தை  திருத்தியமைப்பு அணுகுமுறை:    நடத்தை வாத  கோட்பாட்டு குழாமை  ஆரம்பித்து  வைத்தவர் அமெரிக்க உளவியல்  அறிஞரான ஜே.பி.வொட்சன் என்பவராகும். பிராய்ட் முன்வைத்த உள்ளம் என்ற  எண்ணக்கருவை "வொட்சன்" நிராகரித்தார். இந்த எண்ணக்கரு துரிதமாக உளவியல் விஞ்ஞானத்தில்  இருந்து  அகற்றப்பட வேண்டும்  என்பதை "வொட்சன்" சுட்டிக் காட்டினார். உள்ளத்தின் செயற்பாட்டை  உள விஞ்ஞானமொன்றாக வொட்சன்  ஏற்றுக் கொள்ளாது அதற்காக  மனித  நடத்தையினை ஆய்வுகள், பரிசோதனைகள்,அவதானிப்புக்கள் மூலம் பரீடசித்துப் பார்க்க முயற்சித்தார். வொட்சனின்  பின்னர் பவ்லோ, தோண்டைக் போன்றோர் விலங்குகளை  பயன்படுத்தி  செய்த ஆராய்ச்சிகள் முக்கிய  இடத்தைப் பெற்றுள்ளன. தோண்டைக்  விலங்கு மற்றும் மனித நடத்தைகளை ஒன்றாக  தொடர்பு  படுத்தி வெளிச் சூழலில் பல்வேறு  தூண்டல்களுக்கு கிடைக்கும்  துலங்கல்களை வைத்து  மனித நடத்தைகள் மாற்றமடைவதாக கூறியுள்ளார் . ஏதுமோர் கற்றலின் அடிப்படையில் நடத்...