உளவளத் துணை அணுகுமுறைகள். நியாயித்தல் அணுகுமுறை. ஒருவர் நியாயவாதி அல்லது பகுத்தறிவு வாதி போல் சிந்தித்தால்,செயற்பட்டால் எப்போதும் மகிழ்ச்சியாகவும் ஆக்கத் திறனுடையவராகவும் விளங்குவார் . மாறாக துன்பப் படுகிறவர்களும் சமூகப் பொருத்தப்பாடற்றவர்களும் நியாயித்தல் வாதிகளின் அல்லது பகுத்தறிவு வாதிகளின் கொள்கைக்கு மாறு பட்டவர்களாகக் காணப்படுபவர். பிள்ளைப் பருவத்தில் சரியான குடும்பப் பிணைப்பு அல்லது உறவு இல்லாவிட்டால், இவ்வாறான நியாயித்தலுக்கு எதிரான கொள்கைகள் மாணவரிடம் தோன்றுகின்றன. ஒரு மாணவன் தன் பிள்ளைப் பருவத்தில் சில மூடக்கொள்கைகளை குடும்பப் பெரியாரிடம் இருந்து கற்றுக் கொள்கிறான். நியாயித்தல் அணுகுமுறை பயன்படுத்தியவர்கள்: ஆல்பட் எலிஸ் (1962) ஹோலி (1970) கோன் (1961) விலியம்சன் (1950) நியாயித்தல் தழுவிய அணுகுமுறைகள் அல்பேட் எலிஸ் உடைய மெய்யெழுச்சி பரிகார முறை மிகவும் பிரசித்தி பெற்றது. நியாயவாதத்துடன் ஒவ்வாத மூட நம்பிக்கை உளக் குழப்பத்திற்கும் மெய் எழுச்சிகளுடன் மனவெழுச்சிக் குழப்பத்திற்கும் ...