உளவளத் துணை அணுகுமுறைகள் :
நடத்தை திருத்தியமைப்பு அணுகுமுறை:
நடத்தை வாத கோட்பாட்டு குழாமை ஆரம்பித்து வைத்தவர் அமெரிக்க உளவியல் அறிஞரான ஜே.பி.வொட்சன் என்பவராகும்.
பிராய்ட் முன்வைத்த உள்ளம் என்ற எண்ணக்கருவை "வொட்சன்" நிராகரித்தார்.
இந்த எண்ணக்கரு துரிதமாக உளவியல் விஞ்ஞானத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பதை "வொட்சன்" சுட்டிக் காட்டினார்.
உள்ளத்தின் செயற்பாட்டை உள விஞ்ஞானமொன்றாக
வொட்சன் ஏற்றுக் கொள்ளாது அதற்காக மனித நடத்தையினை ஆய்வுகள், பரிசோதனைகள்,அவதானிப்புக்கள் மூலம் பரீடசித்துப் பார்க்க முயற்சித்தார்.
வொட்சனின் பின்னர் பவ்லோ, தோண்டைக் போன்றோர் விலங்குகளை பயன்படுத்தி செய்த ஆராய்ச்சிகள் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன.
தோண்டைக் விலங்கு மற்றும் மனித நடத்தைகளை ஒன்றாக தொடர்பு படுத்தி வெளிச் சூழலில் பல்வேறு தூண்டல்களுக்கு கிடைக்கும் துலங்கல்களை வைத்து மனித நடத்தைகள் மாற்றமடைவதாக கூறியுள்ளார் .
ஏதுமோர் கற்றலின் அடிப்படையில் நடத்தைகளை மாற்றியமைக்கலாம் எனவும் நடத்தைகள் ஏற்படுவதாகவும் அவர் கூறினார் . மனிதனும், விலங்குகளும் தமது வாழ்வை நடாத்திச் செல்ல அல்லது முன்னெடுத்துச் செல்லத் தூண்டும் காரணிகளுக்கு தூண்டலைக் காட்ட முணைவது இயல்பாகவே காணக் கூடியதாக உள்ளது .

தோண்டைக் நடத்தை கற்றலில் செல்வாக்கு செலுத்தும் அம்சங்கள் பலவற்றை முன் வைத்துள்ளார்.
1.முயன்று பிழை விட்டுக் கற்கும் கோட்பாடு.
2.வழி வந்த கற்றல் கோட்பாட்டு.
3.தண்டனைக் கோட்பாடு.
4.பயிற்சிக் கோட்பாடு.
"இவோன் பவ்லோ" ,"தோண்டைக் " ஐ விட மாறு பட்ட கருத்தை நடத்தை வாத அணுகுமுறை மூலம் முன் வைத்துள்ளார்.
உளவளத் துணை சிகிச்சையின் போது இங்கு காட்டப்படும் புதிய படிப்பினை கற்றுக் கொண்ட ஒன்றாக மாற்றப் பட வேண்டும்.
கற்றல் அல்லது நடத்தை உண்டாதல்,அது மேலும் வளர்ச்சி அடைதல், நடத்தை இல்லாமல் போக பலமான மீளவலியுறுத்தல் அவசியமாவதை நடத்தை வாதிகள் சுட்டக் காட்டினர்.
ஒருவருக்கு ஏதும் ஒரு இலக்கை நோக்கி செல்ல நடத்தையை மாற்றி அமைத்து,ஒருவரின் நடத்தையை கட்டுப்படுத்த முடியும் என்பதைச் சுட்டிக் காட்டி உள்ளனர்.
இதன் படி ஒரு இலக்கை வைத்து அதனை நோக்கி செல்ல முடியும் என்றும் அப்படி செய்யும் போது இலக்கினை அறிந்து கொண்டு அதனை நோக்கி செல்லக் கூடிய வழியைப் படிப்படியாக துணைப் பாகங்களாகப் பிரித்துக் செய்ய முடியும் எனவும் விளக்கியுள்ளனர்.
மீளவலியுறுத்தல் பெற்றுக் கொடுக்கும் போது சம்பந்தப்பட்ட அந்த ஆளுமை,திறமை,விருப்பு வெறுப்புக்கள்,வயது ,ஆளுமை போன்ற அம்சங்கள் மீது கவனம் செலுத்தி படிகளாக்கி நேர் மீள் பெற்றுக் கொடுத்தல் வேண்டும் .
நடத்தை திருத்தியமைப்பு அணுகுமுறைகளை பிரயோகித்து நபர்களின் பல்வேறு நடத்தை பிறள்வுகளை மாற்றியமைக்கலாம்.
தூண்டல் துலங்கல் பிணைப்பை உடைப்பதன் மூலம் நடத்தையினை முன்னேற்றிச் செல்ல முடியும்.
நடத்தை திருத்தியமைப்பு அணுகுமுறையின் படி பின்வருமாறு ஒருவரின் நடத்தையை மேலும் முன்னேற்ற முடியும்.
1.இல்லாத நடத்தைகளை உண்டாக்குதல்.
2.இருக்கின்ற நடத்தைகளை இல்லாமல் செய்தல்.
3.இருக்கின்ற நடத்தைகளை மேலும முன்னேற்றுதல்.
4.பொருத்தமற்ற நடத்தைகளை மாற்றி அமைத்தல்.
இம்முறைகளை பின்பற்றுவது மூலம் சேவை நாடியின் பிழையான நடத்தைகளை சாதா நிலைக்கு கொண்டு வர முடியும்.

Comments
Post a Comment